உள்ளடக்கத்திற்குச் செல்லவும்
R

"Ramu Chellappa" உடன் நேர்காணல்

"BRAVE" இன் ஆசிரியர்

23 நவம்பர், 2026 அன்று வெளியிடப்பட்டது

உங்களைப் பற்றி வாசகர்களிடம் கொஞ்சம் சொல்லுங்கள்.

தென்னிந்திய சினிமா துறையில் பணியாற்றிவருகிறேன். தெனிந்திய கதைகளை நீங்கள் என் மூலம் படிக்கலாம்

நீங்கள் எழுதத் தொடங்கியது எப்போது, என்ன உங்களை தூண்டியது?

என் தாய். அவள் புத்தகம் படிக்கும் பழக்கம் உடையவள். அவளிடமிருந்துதான் படிப்பும் எழுத்தும் தொடங்கியது

எழுதாத நேரத்தில் நீங்கள் என்ன செய்கிறீர்கள்?

சிந்திக்கிறேன். அடுத்த படம் மற்றும் வெப் சீரிஸ் போன்றவற்றிக்கு கதைகளை பேசிக்கொண்டும் எழுதிக்கொண்டும் இருக்கிறேன்

நீங்கள் எங்கே எழுதுகிறீர்கள், அந்த இடம் எப்படி இருக்கும்?

என் அலுவலக அறை தான். கணினியில் உள்ளிடுவேன்

உங்கள் புனைப்பெயரை ஏன் தேர்ந்தெடுத்தீர்கள்?

எனக்கு புனைபெயர் வைக்கும் யோசனை இல்லை. என் உண்மையான பெயரையே நான் இங்கு குறிப்பிட்டுள்ளேன்

உங்களுக்கு வெற்றி எப்படி தெரிகிறது?

ஒரு முற்றில்லா விளையாட்டு வெற்றி பெற்றாலும் மேலும் வெற்றிபெற வேண்டும் என்ற நோக்கத்துடன் வெற்றி நம்மை இழுத்து செல்லும்

நீங்கள் பெற்ற மிக மோசமான எழுத்து ஆலோசனை என்ன?

சிந்திக்காமல் எழுதியது. கண்டதையும் எழுத கூடாது. கருத்து உருவாக்கம் சிந்தித்தல் எழுதுதல்.

தொடங்கியபோது தெரிந்திருக்க வேண்டும் என்று இப்போது நினைப்பது என்ன?

வாழ்கை மென் மேலும் கற்றுகொடுகிறது. மனிதர்களின் சூழலே அவர்களை தீர்மானித்து வாழ்கையை அணுக வைக்கிறது

இப்போது நீங்கள் என்னவெழுதிக் கொண்டிருக்கிறீர்கள்?

ஒரு நாவல். அது மனதிற்கு மிகவும் நெருக்கமானது.

உங்கள் சமீபத்திய புத்தகத்தைப் பற்றி கேள்விப்படாதவருக்கு எப்படி விவரிப்பீர்கள்?

கேள்விபட வேண்டுமளவிற்கு எழுத வேண்டும் என்று நினைக்கிறேன்

இந்தக் கதை ஒரு படத்திலிருந்து தொடங்கிதா, ஒரு குரலிலிருந்தா, ஒரு யோசனையிலிருந்தா, அல்லது ஒரு பிரச்சனையிலிருந்தா?

என் தங்கையின் மகன்களின் காது குத்தின் போது தொடங்கியது

உங்கள் புத்தகம் பிடித்தவர்களுக்கு வேறு எந்தப் புத்தகங்கள் அல்லது தொடர்கள் பிடிக்கும்?

மற்றவர்களின் சுவையை நாம் தெரிந்து கொள்வது கடினம். ஒருவேளை என்னை வாசிக்கும் போது அவர்களும் எனக்கு நெருக்கமான சுவையில் இருப்பார்கள் என்று நினைக்கிறேன்

உங்கள் முதல் திட்டத்திலிருந்து இறுதி புத்தகம் வரை கதையின் எந்தப் பகுதி அதிகமாக மாறியது?

கதை அதன் தேவையை தீர்மானிக்க காலம் எடுத்துக்கொண்டு தன்னைதானே உருவாக்கும்.

உங்கள் கதாபாத்திரங்களில் உங்களுக்கு மிகவும் பிடித்தது எது, ஏன்?

இந்த கதையில் யூசூப் தான். அவனின் பதட்டம்

உங்கள் முதன்மை கதாபாத்திரத்தைப் பற்றி உங்களுக்கு மட்டுமே தெரிந்த ஒன்று என்ன?

எல்லா இடங்களிலும் அவர்கள் வாழ்கிறார்கள்.

Ramu Chellappa எழுதிய புத்தகங்கள்

மேலும் ஆசிரியர் நேர்காணல்கள்

அனைத்து நேர்காணல்களையும் காண்க